மத்யாஷ்டமி, மகாவியதிபாதம், திருவாதிரை; செய்யும் தானம் மகாபுண்ணியம் தரும்!
ADDED :399 days ago
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் காலபைரவருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. இன்று பைரவரை வணங்கி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறந்துபோன ஆன்மாக்களின் ஏக தலைவனாக விளங்குபவர் பைரவர். இந்த நாளில் வீட்டில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு. மங்கலப்பொருள்கள் தானம் செய்வதன் மூலம் அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். இன்று மகாவியதிபாத நாளில் செய்யும் தானம் மகாபுண்ணியம் தரும். முன்னோரை நினைத்து இன்று குடை, வேஷ்டி தானம் தருவது முன்னேற்றம் தரும். திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். இன்று திருவாதிரையில் நடராஜரை வழிபட நல்லதே நடக்கும்.