உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படுநெல்லி கிருஷ்ணர் கோவிலில் வரும் 28ல் திருக்கல்யாண உற்சவம்

படுநெல்லி கிருஷ்ணர் கோவிலில் வரும் 28ல் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாத, 2வது சனிக்கிழமை நாளில், திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெறும். நாளைமறுதினம் இரவு, 7:00 மண அளவில், சிறப்பு கணபதி ஹோமம் மற்றும் திருக்கல்யாண உற்சவ வைபவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், சிவாச்சாரியார் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !