வீட்டில் பூத்த பிரம்மகமலம் ; பூஜை செய்து வழிபாடு
                              ADDED :401 days ago 
                            
                          
                           கூடலுார்; கூடலுார் சரவணன் என்பவரது வீட்டில் பூத்த பிரம்மகமலம் பூவிற்கு பூஜை செய்து மக்கள் வழிபட்டனர். ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ, படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது. நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். அதிக நறுமணத்துடன் ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். இந்த பூ மலரும் போது வேண்டினால் அது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இது அரிய வகை பூ என கருதப்படுகிறது. கூடலுார் கன்னிகாளிபுரத்தில் சரவணன்-ஜெயப்பிரியா தம்பதி வீட்டில் இரவு பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் குவிந்தனர். குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.