தேய்பிறை அஷ்டமி; மேட்டுப்பாளையம் மகா கணபதி கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஆசிரியர் காலணியில் உள்ள ஸ்ரீ ராஜ அஷ்ட விமோக்ஸன மகா கணபதி திருக்கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக புண்யா வசனம் கலசத்தில் விநாயகர் அஷ்டதிக் பாலகர்கள் பைரவர் நவக்கிரகங்கள் உள்ளிட்ட தேவதைகள் ஆவாகன பூஜை முடிந்து மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மிருத்தியஞ்ச ஹோமம் தன்வந்திரி ஹோமம் வடுக பைரவருக்கு ஹோமம் நடைபெற்று வடுக பைரவர் சன்னதியில் பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் மஞ்சள் குங்குமம் விபூதி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சோடக்ஷ உபச்சாரங்கள் முடிந்து மகா தீபாராதனை பிரசாத விநியோகங்கள் நடந்தது. வைபவத்தை லட்சுமி நாராயண அர்ச்சகர் செய்தார். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.