ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
                              ADDED :399 days ago 
                            
                          
                          
ஆலங்குளம்; ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் திருவிழா கடந்த 20ம் தேதி வருஷாபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் நகர்வலம் வந்தனர். 21ம்தேதி சிறுமிகள் பங்கேற்ற புஷ்பாஞ்சலி, 22ம் தேதி திருவிளக்கு பூஜை, 23ம் தேதி கோமாதா பூஜை, தீர்த்தம் எடுத்து வருதல், இரவு சாமகால பூஜை நடந்தது. 24ம் தேதி காலை பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. மாலையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.