தஞ்சை பெரிய கோயிலில் பிரிட்டிஷ், அமெரிக்கா பக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு
                              ADDED :398 days ago 
                            
                          
                          
தஞ்சை ; உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு மேளதாளங்கள் முழங்க பன்னீர் தெளித்து, நெற்றியில் சந்தனம் இட்டு சாக்லேட் வழங்கப்பட்டது, மேலும் தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார், இந்நிகழ்ச்சியில் இண்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.