உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இனி தினமும் இரவில் ஜொலிக்கும்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இனி தினமும் இரவில் ஜொலிக்கும்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


பிரசித்தி பெற்ற கோவில்களில், வழக்கமாக திருவிழா காலங்களில் மட்டும் தற்காலிகமாக வண்ண விளக்குகள் கட்டப்படும். சட்டசபை மானிய கோரிக்கையின்போது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நிரந்தரமாக வண்ண விளக்குகள் ஜொலிக்கவிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, உபயதாரர் பங்களிப்புடன், 1.97 கோடி ரூபாய் செலவில் நிரந்தர வண்ண மின் விளக்கு அலங்காரம் அமைக்கப்பட்டது. அதை, மஹா சிவராத்திரி நாளில், அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். இந்த விளக்கு அலங்காரம், சாதாரண சீரியல் விளக்குகள் போலன்றி, கோவிலின் பழமை மாறாமல் அதன் கட்டடக்கலை நுணுக்கங்களை இரவிலும் தெளிவாகக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளை ராஜகோபுரம், மூலவர் மற்றும் அம்பாள் சன்னிதிகளின் கோபுர விமானங்கள் மற்றும் கோவில் மதில் சுவர்கள் தனித்துவமான வெளிச்சத்தில் தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி, வரை இந்த விளக்குகள் ஒளிரவிடப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !