221 கிலோ லட்டில் பெருமாளின் விஸ்வரூப தரிசனம்; பெரம்பூரில் விமரிசை
ADDED :455 days ago
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி மாத சிறப்பை முன்னிட்டு, பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில், பெரம்பூரில் 221 கிலோவில், ‘லட்டு பெருமாள் வைபவம்’ சிறப்பாக நடந்தது. பெரம்பூர், மீனாட்சி தெருவில் உள்ள பெரம்பூர் அன்னதான சமாஜத்தில், காலை 6:00 மணியளவில், கோ பூஜையுடன் 221 கிலோ லட்டு பெருமாளின் விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இன்று மற்றும் நாளை சுப்ரபாதத்துடன் விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து பக்தர்களுக்கான தரிசனம் மற்றும் சகஸ்ர நாம பாராயணம் நடக்கிறது. 29ம் தேதி இரவு 8:00 மணியளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.