பாலசுப்ரமணியர் ஸ்வாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :4734 days ago
மோகனூர்: கீழ்பாலப்பட்டி பாலசுப்ரமணியர் கோவிலில், சூரசம்ஹார விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மோகனூர் அடுத்த கீழ்பாலப்பட்டியில், பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் கந்தசஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு கோவில் இருந்து, ஸ்வாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நேற்று மதியம், ஒரு மணிக்கு பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.