அன்னமலை கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி!
ADDED :4734 days ago
மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.காலை 7 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் புடைசூழ பவனி வந்தார். பின், வள்ளி, தெய்வானையுடன் திருமணம் நடக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி, ஸ்ரீ அனந்தமகமாஹி அம்மா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.