உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசை வழிபாடு
ADDED :411 days ago
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’, ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவர். இந்நாளில், முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய் மற்றும் தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவர். நேற்று மகாளய அமாவாசையை ஒட்டி, திருமூர்த்திமலை மணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பாலாற்றங்கரையில், முன்னோர்களுக்கு திதி வழங்கினர். அமாவாசையையொட்டி, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, மும்மூர்த்திகளை வழிபட்டனர். இந்து அறநிலையத்துறை சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.