உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை ; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.


சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற  இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா இன்று காலை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை கையில் ஏந்தியவாறு பதியை  சுற்றி வந்து பின்னர்  கோவிலை வளம் வந்து கொடி மரத்தை அய்யா அரஹர சிவ சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி மங்கள வாத்தியம் முழங்க கோடி ஏற்றப்பட்டது. அப்போது சங்கநாதம்  முழங்க ஐயா ஹர ஹர ஹர சிவ சிவ  என ஐயாவின்  நாமத்தை பக்தி பரவசத்துடன் உச்சரித்தனர்  அதனைத் தொடர்ந்து ஐயாவுக்கு பால்பணிவிடை,  உகப்படிப்பு நடந்தது. இரவு  காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வந்தார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தினமும் இரவு அலங்கரிப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8-வது நாளான 11-ந்தேதி இரவு  மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !