ஸ்ரீவி., திருவண்ணாமலை கோயிலில் நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்; தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனியைச் சேர்ந்த பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக மூன்றாம் சனிக்கிழமையில் ஒரு மடங்கு பக்தர்கள் கூடுதலாக வருவார்கள். இதனால் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்துள்ளனர். இன்று இரவு முதல் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.