உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணப்பாக்கம், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மகா உற்சவம்

மணப்பாக்கம், கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மகா உற்சவம்

சென்னை : சென்னை, மணப்பாக்கம், கனகவல்லி தாயார் சமேத கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் 11ம் ஆண்டு புரட்டாசி மஹா உற்சவம் நாளை 5ம் தேதி துவங்குகிறது.


விழாவில் புரட்டாசி சனிக்கிழமை 11ம் ஆண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரமும் மற்றும் சாற்றுமுறை தீர்த்தப் பிரசாதம் வினியோகமும் அதைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் கரிய மாணிக்கப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.


3ம் வாரம் நிகழ்ச்சி நிரல்:


05.10.2024 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரம், தீர்த்தம், பிரசாதம் வினியோகம் மாலை 5.00 மணிக்கு மங்கள வாத்திய இசை


மாலை 6.00 மணிக்கு இராமாபுரம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி பக்த பஜனை சபாவின் பஜனை, மாலை 7.00 மணிக்கு கருட சேவையில் சிறப்பு அலங்காரத்தில் கரியமாணிக்கப் பெருமாள் திருவீதி உலா


புரட்டாசி மாத நிகழ்ச்சி நிரல்


முதல் வாரம் புரட்டாசி 5 செப்டம்பர் 21 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரம் நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் விநியோகம்.


2-வது வாரம் புரட்டாசி 12 செப்டம்பர் 28 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் இராஜ பிரசாதம் விநியோகம். அலங்காரம் நடைபெற்று தீர்த்தம்,


3-வது வாரம் புரட்டாசி 19 அக்டோபர் 5 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் புஷ்ப அங்கி சேவை. அதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணியளவில் உற்சவருக்கு கருட சேவையில் திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.


4-வது வாரம் புரட்டாசி 26 அக்டோபர் 12 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் திருமலை திருப்பதி அலங்காரம் நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் விநியோகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !