உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி; பழநி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி சனி; பழநி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.பழநி, மேற்கு ரதவீதி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம், அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், ராமநாத நகரில் உள்ள காரிய சித்தி லட்சுமி நரசிம்மர் கோயில், கண்ணடி பெருமாள் கோயில், ரங்கநாதர் பாதம், பாலாறு அணை ஆஞ்சநேயர் கோயில், பாலசமுத்திரம் வீர ஆஞ்சநேயர் கோயில் கரடிகூட்டம் சாந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்ட பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !