மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
338 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
338 days ago
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை மூன்றாம் வாரத்தை முன்னிட்டு மூலவர் வரதராஜப் பெருமாள் திருப்பதி அலங்காரத்திலும், உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை, துளசி அலங்காரத்தில் காட்சியளித்தனர் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பெரியகுளம் தென்கரை யாதவர் தெரு கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் வடகரை கோதண்ட ராமர் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வாழைப்பழம் மாலை அணிவித்து பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் மலர் அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சியளித்தனர்.
338 days ago
338 days ago