மதுராந்தகம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :477 days ago
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில் அலர்மேல் மங்கா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவில், மிகவும் பழமையானது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால், காலையில் நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசேஷ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து, ‘கோவிந்தா... கோவிந்தா’ என கோஷம் எழுப்பி, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.