ஆவணி மாத பிறப்பு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :13 hours ago
கோவை; ஆவணி மாதம் பிறப்பு மற்றும் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர் இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு கோவை ராம்நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் விநாயக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.