உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திலி பாலமுருகன் கோவிலில் சஷ்டி பூஜை; சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு

இந்திலி பாலமுருகன் கோவிலில் சஷ்டி பூஜை; சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு

கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் சஷ்டி பூஜை மற்றும் செவ்வாய் கிழமை சிறப்பு சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.


கோவிலில் தேய்பிறை சஷ்டியையொட்டி சுவாமிக்கு நேற்று காலை 10:30 மணிக்கு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து செவ்வாய் கிழமை சிறப்பாக, முருகப்பெருமானின் 300 புனித நாமாக்களைக் கொண்டு எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளை அழிக்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், வியாபார வளர்ச்சி பெறவும், கடன்கள் அகலவும், எதிர்மறை ஆற்றல் விலகவும், ஏவல், சூன்யம் மற்றும் பயம் நீங்கி மன அமைதியும் தைரியமும் பெறவும், செவ்வாய் தோஷம் நிவர்த்திக்காவும் வழிபடக்கூடிய சத்ரு சம்ஹார திரிசதி பூஜை நடத்தப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா குருக்கள் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !