உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன் துவக்கம்!

பழநி கோயிலில் தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன் துவக்கம்!

பழநி: பழநிகோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நவ., 27 ல், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்படும். திருவிழாவை முன்னிட்டு நேற்று மூலவர், சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. விழா நிகழ்ச்சிகள் ஏழு நாட்களுக்கு நடக்கும். நவ.,26 மாலை 6 மணிக்கு மேல் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். நவ., 27 கார்த்திகை தினத்தன்று, அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டதும், சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பம் அருகே எழுந்தருள்வார். மாலை 6 மணிக்கு மேல் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்படும். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !