உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா; மதுரபாஷினி அம்மபாளுக்கு மகாஅபிஷேகம்

விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா; மதுரபாஷினி அம்மபாளுக்கு மகாஅபிஷேகம்

திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் தேவிக்கு  நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்கா பரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சௌந்தரிய சௌபாக்கியம் பெறலாம்.விழாவின் 6ம் நாளான இன்று அம்பாளுக்கு மகாஅபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !