பிள்ளையார்குளத்தில் புரவி எடுப்பு விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :466 days ago
நரிக்குடி; நரிக்குடி பிள்ளையார்குளத்தில் பொய் சொல்லா மெய் அய்யனார், மாட்டு தலையை மான் தலையாக்கிய முத்தையா சுவாமி, அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா நடந்தது. மாவிளக்கு பூஜை, முக்கிய நிகழ்ச்சியாக புரவி எடுப்பு விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம் வயல்சேரியிலிருந்து 10 கி.மீ., நடந்து சென்று குதிரைகளை சுமந்து வந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தன.