உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா

திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் நேற்று மாலை 6:00 மணிக்கு ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு கொலு மண்டபத்தில் சிவஸ்ரீ நாட்டியாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், அம்பிகைக்கு மகா தீபாராதனை, ஆரத்தி, பிரசாத விநியோகிக்கப்பட்டது. கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !