உடுமலையில் மணப்பெண் கோலத்தில் அருள்பாலித்த மகேஸ்வரியம்மன்
ADDED :464 days ago
உடுமலை; உடுமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மணப்பெண் கோலத்தில் மகேஸ்வரியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
உடுமலை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில்நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை சிறப்பு ேஹாமம், தீபாராதனை நடந்தது. விழாவில் மணப்பெண் கோலத்தில் மகேஸ்வரியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.