உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் சக்தி கொலுவில் காமாட்சி அம்மன் அருள்பாலிப்பு

வடபழனி ஆண்டவர் சக்தி கொலுவில் காமாட்சி அம்மன் அருள்பாலிப்பு

சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது. சக்தி கொலுவில் இன்று, மீனாட்சி அம்மன் உற்சவருக்கு, அம்மன் கொலு சன்னிதியில் ஏகதின லட்சார்ச்சனை காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடத்தப்படுகிறது. நாளை விஜயதசமியை முன்னிட்டு, காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், இரண்டரை முதல் மூன்றரை வயது வரை உள்ள இளம் தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !