திருப்பதி பிரம்மோற்சவ விழா; தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்
ADDED :404 days ago
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று(அக்.,11) தேரோட்டம் நடைபெற்றது. தங்கக் குடையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சுவாமி பவனி வந்தார். மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 12ம் தேதி காலை 6 மணி சக்ர ஸ்நானம், இரவு 8:30 மணி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.