உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: வீடு, கோயில்களில் சிறப்பு பூஜை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: வீடு, கோயில்களில் சிறப்பு பூஜை

கூடலூர்; கூடலூரில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை முன்னிட்டு கோவில்கள் வீடுகளில் நவராத்திரி கொலு வைத்து வழிபட்டனர். 9வது நாளான இன்று கூடலூர் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வீடுகளிலும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கூடலூர் நகரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள் அலங்கரிக்கப்பட்டு, ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !