உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேசுக்கோ... தீசுக்கோ... பாடியபடி கத்திபோட்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேசுக்கோ... தீசுக்கோ... பாடியபடி கத்திபோட்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை; டவுன்ஹால் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடியபடி, தங்கள் உடலில் கத்தி போட்டுக் கொண்டு பரவசமடைந்தனர்.


விஜயதசமியை முன்னிட்டு பக்தர்கள் கைகளில், கத்தியால் வெட்டி  ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக சென்று, பூமார்க்கெட்டில் உள்ள ராமலிங்க  சவுடேஸ்வரி அம்மனுக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.தேவாங்க சமூகத்தை  சேர்ந்த இளைஞர்கள், 500க்கும் மேற்பட்டோர், ’வேசுக்கோ தீசுக்கோ...’ என்று  கோஷம் எழுப்பியபடி கத்தியால் கீறி, ரத்தம் வரவழைத்து நேர்த்தி கடன்  செலுத்தினர்.


பக்தர்கள் கூறுகையில், ”இவ்விழாவில், கலந்து கொள்பவர்கள்,  விரதம் இருந்து, கத்தி போட்டு விரதத்தை கலைத்து கொள்வர். 20க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களால் ஆன மஞ்சள் போடி துாவுவதால், கத்திபட்ட  காயங்கள் ஆறுகின்றன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !