கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி தேரோட்டம்
ADDED :360 days ago
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தேரோட்டம் நடந்தது.
பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திரு-வீதி உலா நடந்து வருகிறது. விழாவில் இன்று (12ம் தேதி) காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.