ராமநாதபுரம் பெரியகோவிலில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட குழந்தைகள்; அ, ஆ எழுதி உற்சாகம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரியகோயில் சொக்கநாதர் கோயிலில் தினமலர் மாணவர் பதிப்பு, ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் அரிச்சுவடி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அழியாத செல்வம் கல்விச்செல்வம். அதை தங்கள் குழந்தை செல்வங்களுக்கு முறையாக வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இந்த கடமை உணர்வுடன் விஜயதசமி நாளான இன்று ராமநாதபுரம் பெரியகோயில் சொக்கநாதர் கோயிலில் தினமலர் மாணவர் பதிப்பு, ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் அரிச்சுவடி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்று சிறப்பித்தனர். ரமேஷ் குருக்கள் மந்திரங்கள் சொல்லி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் திரளான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அரிச்சுவடியை துவக்கி வைத்து அகம் மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியை கே.ஆர். தங்க மாளிகை, வாசுதேவன் பாத்திரக்கடை, கே. ராமசாமி பர்னிச்சர் இணைந்து வழங்கியது. சில்வர் தட்டு, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை. பாக்கு, நோட்டு, பென்சில், இனிப்பு போன்ற பூஜைக்குரிய பொருட்கள் இலவமாக வழங்கப்பட்டன.