புரட்டாசி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :363 days ago
கோவை; கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்ப அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.