உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

திருநகர்; திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் 27ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. அக். 4ல் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. கோயிலில் இருந்து திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலுக்கு கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், பால்குடம், தீச்சட்டி எடுத்தல், முகத்தில் அழகு குத்தி உருவ பொம்மை நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. நேற்று முன் தினம் பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றனர். நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !