தர்மமுனீஸ்வரர், முப்பிடாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா
                              ADDED :381 days ago 
                            
                          
                          
கமுதி; கமுதி அருகே சீமானேந்தல் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தர்மமுனீஸ்வரர், முப்பிடாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர்.இதனை முன்னிட்டு காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.தர்மமுனீஸ்வரர், முப்பிடாரியம்மன் பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம்,பூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி தூக்கி பெருமாள் கோயில் கண்மாய் கரையில் உள்ள தண்ணீரில் கரைக்கப்பட்டது.ஏற்பாடுகளை சீமானேந்தல் கிராமமக்கள் செய்தனர்.