கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :716 days ago
கோவை; கோவை, மதுக்கரை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.