உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் பவுர்ணமி வழிபாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்துாரில் பவுர்ணமி வழிபாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்கி வழிபட்டனர்.


திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் பவுர்ணமி இரவில் தங்கி வழிபாடு மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பவுர்ணமியன்று கடற்கரையில் தங்கி சமுத்திர அபிஷேகம் வழிபாடு மேற்கொள்வதோடு அதிகாலையில் கடலிலும் நாழிக் கிணற்றிலும் குளிப்பதால் மனநிறைவும் செல்வ செழிப்பும் ஏற்படும் என பக்தர்களிடையே நம்பிக்கை பரவுகிறது. இதனால் நேற்று இரவில் பவுர்ணமி வழிபாட்டிற்காக கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசித்தனர். கோயிலுக்குள் செல்ல முடியாத அளவு கூட்டம் அலைமோதியதால் வளாகத்தில் முருகனை வேண்டி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !