ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புஷ்ப யாகம்
ADDED :388 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ரசயனர் சன்னதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் நிறைவை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. இக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் அக்.4ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடந்தது. அக்.12ல் செப்பு தேரோட்டம் நடந்தது. விழாவின் நிறைவை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு வட பத்ரசயனர் சன்னதி கோபால விலாசத்தில் புஷ்ப யாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.