சித்திரெட்டிபட்டி ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :389 days ago
திருமங்கலம்; திருமங்கலம் தாலுகா சித்திரெட்டிபட்டியில் உள்ள பொக்கலாப்பட்டி ஆத்மநாதர் ஜீவ சமாதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று கால யாக சாலை பூஜை, மகா ருத்ர யாகம், மகன்யாசம் நடந்தது. ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகளை சிருங்கேரி சாரதா வீதம் ஸ்ரீ வேம்புஐயர்சாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். ஊர் நாட்டாமை வேங்கடரமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவில் கட்டுவதற்கு டாக்டர் ஹரிஹரன், ரமேஷ் பாபு, ராஜா பூர்ண சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் நிதி வழங்கினர். ஏற்பாடுகளை ஜெயக்குமார், ஜெகதீஷ்குமார், கணேசன் செய்தனர்.