பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :388 days ago
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா, கடந்த ஆக., 30ல் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் நடைபெற்று வந்த, மண்டல பூஜை நேற்று நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு, கணபதி ேஹாமம், சங்காபிேஷகம், யாக சாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர் மூலவர்களுக்கு ஊற்றப்பட்டு மண்டலாபிேஷக விழா நடந்தது. தொடர்ந்து, மூலவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.