சாய்பாபா பிறந்த நாள்: சென்னையில் 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை!
ADDED :4723 days ago
பகவான் சத்ய சாயிபாபாவின் 87 வது பிறந்தநாள் சென்னையில் உள்ள சுந்தரத்தில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனையுடன் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, சென்னை ஆரியபுரத்திலுள்ள சுந்தரத்தில் நவம்பர் 17 ஆம் தேதி துவங்கி 23 தேதி வரை 7 நாட்கள் நடந்த பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியில் பஜனை, பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் சொற்பொழிவுகள் நடைப்பெற்றதோடு, இசைகலைஞர்களின் பக்திபாடல்களும் பாடப்பட்டன. வெள்ளிக்கிழமை (நவ.23ல்) நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் அதிகாலை ஓம்காரத்தில் ஆரம்பித்து சுப்ரபாதம், நகரசங்கீர்தம், சாய் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், 1008 சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் பஜனைகள் இடம்பெற்றன. பின்பு முதியவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு வேஷ்டி சட்டை, சேலைகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டன.