உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் இலவச திருமணம்

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் இலவச திருமணம்

சென்னை; திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி முதல்வர் ஸ்டாலின் வைத்தார்.  4 கிராம் தங்கத்தாலி, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.


கோவை ; இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமண நிகழ்ச்சி கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று நடந்தது. கோயில் திருமணத் திட்டத்தின் கீழ் மணமக்களுக்கு நான்கு கிராம் தங்கம், ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகள் வழங்கப்பட்டது.


திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் அரசு அறிவித்த இலவச திருமணங்கள் நடந்தது. 


திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சரவண பெருமாள்- வர்ஷினியா, மறவன்குளம் கார்த்திகேயன்- மாணிக்கமனோகரி, விருதுநகர் சத்திரப்பட்டி ராம்குமார்- ஜெயலட்சுமி ஆகிய ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் கோயிலில் நடந்தது. கோயில் அறங்காவலர் சத்தியபிரியா, மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்கம், பட்டு சேலை, வேஷ்டி பட்டு சட்டை, கட்டில், பீரோ, பூஜை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அவரது சொந்த செலவில் சீதனமாக வழங்கினார். அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் பொம்ம தேவன், சண்முகசுந்தரம், மண்டல தலைவர் சுவிதா, கோயில் துணை கமிஷனர் சூரியநாராயணன், தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் பாலாஜி தலைமையில் மணமக்களுக்கு கோயிலில் திருமணம் நடந்தது.


அவனியாபுரம்: கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தர சுரேஷ்-மகேஸ்வரிக்கு திருமணம் நடந்தது. கோயில் திருமணத் திட்டத்தின் கீழ் மணமக்களுக்கு நான்கு கிராம் தங்கம், ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசைகள் வழங்கப்பட்டது.


நாகப்பட்டினம்; நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்,19 தம்பதியினருக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில், இன்று ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏழை, எளிய தம்பதியினருக்கு இலவச திருமணம் நடந்தது. நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்,19 தம்பதியினருக்கு மேள, தாளம் முழங்க, வேதமந்திரங்களை கூறி ஐதிக முறைப்படி சிவாச்சாரியார்கள் திருமணம் செய்து வைத்தனர். வாரிய தலைவர்கள் கவுதமன், மதிவாணன் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !