திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில்களில் உண்டியல் திறப்பு
ADDED :444 days ago
நடுவீரப்பட்டு; பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மற்றும் சரநாராயண பெருமாள் கோவில்களில் காணிக்கை உண்டியல் திறந்து, பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டது. காட்டுமன்னார்கோவில் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் ஜெயசித்ரா, கோவில் செயல்அலுவலர் தின்ஷா தலைமையில் உண்டியல் எண்ணப்பட்டது. வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 434 மற்றும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 710 இருந்தது.