உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி நேற்று காலை வரசித்தி வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மல்லிகை, முல்லை, சம்பங்கி, ரோஸ் உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் முன் உள்ள யாகசாலையில் அஸ்வருடவ வாராகி ஹோமம், மகா பூர்ணாவதி , சிம்ஹாருட வாராகி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மீண்டும் மாலை உலக நன்மை வேண்டி இலக்கு வாராகி  ஹோமம், நடந்தது. இதில் திண்டுக்கல், காரைக்குடி, மதுரை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !