மார்பை மறைத்த காரணம்
ADDED :4735 days ago
இரண்யனின் சேவகர்கள் பிரகலாதனை மலை மேலிருந்து உருட்டிக் கீழே தள்ளினர். உடம்பில் மற்ற பகுதிகளில் காயம் படுவது பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால், மார்பில் அடிபடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். கைகளால் மார்பை மறைத்துக் கொண்டு உருண்டான்.காரணம் என்ன தெரியுமா! தன் இதயத்தாமரையில் வீற்று இருக்கும் பரம்பொருளான விஷ்ணுவுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாதே என்ற துடிப்பு மிக்க பக்தி! உள்ளத்தை கடவுளின் இருப்பிடமாக எண்ணி மனிதன் வாழவேண்டும். நமக்குள் அந்தர்யாமியாக (மறைந்து) விஷ்ணுவீற்றிருக்கிறார் என்கிறது வேதம். "மாதவனை இதயத்தில் பிரதிஷ்டை செய்து பக்தி என்னும் பூவால் அர்ச்சித்து மகிழுங்கள் என்று பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.