ஐப்பசி செவ்வாய்; பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :528 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம்_ குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதரராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிதார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.