உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்; நிர்வாகம் வேண்டுகோள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்; நிர்வாகம் வேண்டுகோள்

மதுரை; மீனாட்சியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்ற சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே கோவில் கும்பாபிஷேகம் நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ஐந்து கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி விமான பாலாலயம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோபுரங்களில் சாரம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. திருப்பணிகள் நடைபெறுவதால் கோபுரத்தைச் சுற்றி திரைத்துணி சுற்றப்பட்டுள்ளது. எனவே, அருகில் வசிப்போர் கோவில் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம் என கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !