தீபாவளி தரிசனம்; பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :352 days ago
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், தீபாவளியையொட்டி நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இக்கோவிலில், பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று வந்த பக்தர்கள், வின்ச் மூலம் செல்ல பல மணி நேரம் காத்திருந்தனர். வெளி மாநில, வெளியூர், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். அன்னதானத்திற்கும் காத்திருந்து உணவு அருந்தினர். கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தனி வழி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.