உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரத்து எட்டு லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூர்னேஸ்வரி

ஆயிரத்து எட்டு லட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னபூர்னேஸ்வரி

கோவை; கோவையிலுள்ள மேற்கு திருவேங்கடசாமி சாலையில் அமைந்துள்ள அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நேற்று தீபாவளியை ஒட்டி ஆயிரத்து எட்டு லட்டுகளால் அன்னபூர்னேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அன்னபூர்னேஸ்வரி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் தீபாவளித்திருநாளான நேற்று அதிகாலை அபிஷே கம், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து,


அம்பாளுக்கு ஆயிரத்து எட்டு லட்டுகளால் தேர் போன்று அலங்கரிக்கப்பட்டு அதில் அம்பாளுக்கு சுவர்ண ரத்ன கவசம் அணிவிக்கப்பட்டு அன்னை அன்னபூர்னேஸ்வரி அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தீபாவளியன்று நடைபெறும் இந்த சிறப்பு பூஜைகளில் பலரும் பங்கேற்று வழிபாடு செய்தனர். கோவில் சார்பில் செயல்படும் வேதபாடசாலையில் கற்போர் கற்பிப்போரின் வேத கோஷங்களும், பாராயணங்களும், ஹோமங்களும் நேற்று நிறைவேற்றப்பட்டன. மங்களவாத்தியங்கள் முழங்கின. திரளானோர் நேற்று சுவாமியை வழிபட்டனர். கோவில் வளாகத்திலுள்ள யோக நரசிம்மர் சன்னிதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் அவருக்கும் லட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளானோர் சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !