ரிண விமோச்சன லிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக பூஜை
                              ADDED :364 days ago 
                            
                          
                          
உடுமலை; உடுமலை அருகே குறிஞ்சேரியில், ரிண விமோச்சன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5வது ஆண்டுவிழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிஷேக ஆராதனை, அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும், தொடர்ந்து 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. திருவாசகம் முற்றோதல், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.