புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :419 days ago
புவனகிரி; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மருதுார் வள்ளலார் அவதார இல்லம், புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புவனகிரி அடுத்த மருதுார் வள்ளலார் அவதார இல்லம், கிருஷ்ணாபுரம் தெய்வநிலையத்தில் காலையில் இருந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் வள்ளல்பெருமானின் அருளை வேண்டி பக்தர்கள் அகவற்பா ஓதினர். அதன் பின் தியானம் செய்தனர். மலரால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் பக்தர்கள் மலர் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு, சுடு தண்ணீருடன் அன்னதானம் வழங்கினர். புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்திலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.