உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் குவிந்தனர்

மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் குவிந்தனர்

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்காப்பு அலங்காரம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு மகாலட்சுமி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் உற்சவத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் பாடல்களை பாடி கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வணங்கினர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., தினகரன், டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, கடலுார், விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !